Press "Enter" to skip to content

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதலில் 5 காவல் துறையினர் பலி

ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் இன்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 காவல் துறையினர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ராஞ்சி:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் காவல் துறை படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் இன்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 காவல் துறையினர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஜாம்ஷெட்பூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சராய்கேலா மாவட்டத்துக்குட்பட்ட பிரபல சந்தை பகுதியில் இன்று மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »