Press "Enter" to skip to content

சென்னை சேத்துப்பட்டு தொடர் வண்டி நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சென்னை சேத்துப்பட்டு தொடர் வண்டி நிலையத்தில் இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு தொடர் வண்டி நிலையத்தில் இன்றிரவு ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அந்த வாலிபர் அரிவாளை எடுத்து பெண்ணை வெட்டியுள்ளார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில் அந்த வாலிபர் தொடர் வண்டி முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் தொடர் வண்டி நிலையத்தில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »