Press "Enter" to skip to content

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தங்கத்தால் செய்யப்பட்ட தீபாராதனை அடுக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தங்கத்தால் ஆன தீபாராதனை அடுக்கை பக்தர்கள் வழங்கினர். அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். இந்த கோயிலில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜை முடிந்தவுடன் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

இந்நிலையில் சுவாமிக்கு தீபாராதனை காண்பிப்பதற்காக சில பக்தர்கள் சேர்ந்து சுமார் மூன்று கிலோ தங்கத்தில் ரூ.90 லட்சம் செலவில் ஏழு அடுக்கு கொண்ட தீபாராதனை அடுக்கை தயார் செய்து கோயில் தீட்சிதர்களிடம் வழங்கினர். தீபாராதனை அடுக்கை பெற்றுக்கொண்ட கோயில் தீட்சிதர்கள் நடராஜர் சன்னதிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து இந்த தங்க தீபாராதனை அடுக்கால் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.