Press "Enter" to skip to content

சாலைகள் சீரமைக்கப்பட்ட பிறகே டோல்கேட்டில் முழுகட்டண வசூல்: ஆய்வு செய்து சான்றளிக்க உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு

மதுரை: சாலைகள் சீரமைக்கப்பட்டதாக ஆய்வு செய்து சான்றளித்த பிறகே டோல்கேட்டில் முழு கட்டணம் வசூலிக்க வேண்டுமென உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மகாலிங்கம்,  உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை – தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தியில் டோல்கேட் உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. வாகனங்களும்  அடிக்கடி பழுதாகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை முதல் அருப்புக்கோட்டை வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைக்கவும்,  அதுவரை எலியார்பத்தி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடையும் விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தேசிய நெடுஞ்சாலையை முறையாகவும், முழுமையாகவும் சீரமைக்கும்வரை எலியார்பத்தி டோல்கேட்டில் அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் குறைத்து கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டிருந்தார்.  இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வேய்ஸ் நிறுவனத்தின் சார்பில் உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதைபோல், பிரதான மனுதாரர் தரப்பில் 50 சதவீத கட்டண குறைப்பு கோரி ஒரு மனு  செய்யப்பட்டிருந்தது.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ேக.ரவிச்சந்திரபாபு, ெசந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு: கட்டண வசூல் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம் தேசிய நெடுஞ்சாலைகள்  ஆணையத்தின் சார்பில் ஒரு தன்னிச்ைசயான ஆலோசகரை நியமிக்க வேண்டும்.

 அவர், டோல்கேட் ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி சாலைகள் மற்றும் வசதிகள் உள்ளதா, சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும், டோல்கேட் ஒப்பந்ததாரருக்கும்  சான்று அளிக்க வேண்டும். அதன்பிறகு முழு கட்டணம் வசூலிப்பது குறித்தும், இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் விளம்பரம் வெளியிட வேண்டும். விளம்பரம் வெளியிட்டதில் இருந்து 10 நாட்களுக்கு பிறகே முழு கட்டணம் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.