Press "Enter" to skip to content

நீட் தேர்வு தொடர அரசு அனுமதிக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

கோவில்பட்டி: தமிழகத்தில் நீட் தேர்வு தொடர அதிமுக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் நடந்த சுதந்திர  போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களுக்கு பென்ஷன் வழங்கவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  குமரி அனந்தனின் வேண்டுகோளை ஏற்று தர்மபுரி மாவட்டம்  பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் ராமசாமி  படையாச்சியார் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி  பழனிசாமி இம்மாதம் திறந்து வைக்க உள்ளார்.

 பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால்  தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலையத்திற்கான முதற்கட்ட பணி நிறைவு   பெற்றுள்ளது.
 தமிழகத்தில் காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. ஆணவ கொலைகளை  கட்டுப்படுத்த முதல்வர் தீவிர நடவடிக்கை எடுத்து  வருகிறார். தமிழகத்தில் ஒரு  போதும் நீட் தேர்வு தொடர அதிமுக அரசு அனுமதிக்காது என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.