Press "Enter" to skip to content

டிரைவர் வர தாமதம் மதுரை – செங்கோட்டை தொடர் வண்டி2 மணி நேரம் தாமதம்

விருதுநகர்: விருதுநகரில் டிரைவர் வருவதற்கு தாமதம் ஆனதால், மதுரை – செங்கோட்டை பயணிகள் தொடர் வண்டி2 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக புறப்பட்டுச் சென்றது. மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயில், விருதுநகருக்கு செல்லும்போது அங்கு டிரைவர் மாறி, செங்கோட்டை வரை ஓட்டிச் செல்வார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி பகுதியில் தொடர் வண்டிபாதை பணி நடப்பதால், நேற்று முதல் விருதுநகரில் இருந்து மதுரை – செங்கோட்டை பயணிகள் தொடர் வண்டிமாலை 6 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், டிரைவர் வருவதற்கு தாமதம் ஆனதால், தொடர் வண்டிபுறப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக 8.30 மணிக்கு டிரைவர் வந்து ரயிலை ஓட்டிச் சென்றார். 6 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட வேண்டிய தொடர் வண்டி2.30 மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து நிலைய அதிகாரி கூறுகையில், ‘‘வழக்கமாக மதுரை – செங்கோட்டை ரயிலை ஓட்டிச்செல்லும் டிரைவர், குருவாயூர் எக்ஸ்பிரஸில் விருதுநகர் வந்து ரயிலை ஓட்டிச் செல்வார். நேற்று கள்ளிக்குடி அருகே சிக்னல் கோளறால், அந்த தொடர் வண்டிவருவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் டிரைவர் தாமதமாக வந்தார்’’ என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.