Press "Enter" to skip to content

நவோதயா பள்ளிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நாகர்கோவில்: நவோதயா பள்ளிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க குமரி மகா சபா முடிவு செய்துள்ளது. குமரி மகா சபா கூட்டம் அதன் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது. செயலாளர் ஜாண்சன், பொருளாளர் ஜெயநேசகுமார், துணை தலைவர்கள் ஜேசர்ஜெபநேசன், தம்பிராஜ், சந்திரமோகன், இணை செயலாளர் பழனி, அலெக்ஸாண்டர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அதன் தலைவர் ராவின்சன் கூறியதாவது: குமரி மகா சபா சார்பில் குமரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை மதுரை தொடர்வண்டித் துறை கோட்டத்துடன் இணைப்பதை தவிர்த்து, குமரி மாவட்டத்தை மையமாக கொண்டு புதிய தொடர்வண்டித் துறை கோட்டம் உருவாக்க வேண்டும் என்று நடவடிக்ைக எடுத்து வருகிறோம். இதனை வசந்தகுமார் எம்பியிடம் முன் வைத்தோம். அவரும் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக வலியுறுத்தி பேசியுள்ளார். அதனை போன்று குமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, விமான நிலையத்தின் தேவை தொடர்பாக குமரி மகா சபாவின் கோரிக்கை அடிப்படையில் பாராளுமன்றத்தில் வசந்தகுமார் எம்பி வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதற்காக குமரி மகா சபா அவரை பாராட்டுகிறது.புதிய ரயில்கள் இணைப்பு குமரி மாவட்டத்திற்கு தேவை. தேஜஸ் தொடர் வண்டிமற்றும் நிஜாமுதீன்- மதுரை ரயில்களை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

 நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு, தமிழக முதல்வரை சந்தித்து அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கினை திரும்ப பெற செய்ய குமரி மகா சபா முயற்சிகள் மேற்கொள்ளும்.வரும் செப்டம்பர் 14ம் தேதி குமரி மகா சபா மேம்பாட்டு ஆலோசனை குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 2 எம்பிக்கள், 6 எம்எல்ஏக்கள் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல்ேவறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்து குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான 10 திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகளை கேட்டு பெறப்படுவதுடன் வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்த திட்டங்களை நிறைவேற்றவும் குமரி மகா சபா தேவையான நடவடிக்ைககளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.