Press "Enter" to skip to content

கடையநல்லூர் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

கடையநல்லூர்: கடையநல்லூர் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து முகமது அபுபக்கர்  எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.அப்போது அவர் கடையநல்லூர் ஒன்றியம் சுந்தரேசபுரம் அரசு பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி புதிய கட்டிட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை வனப்பகுதிக்கு மாற்றாமல் தாங்கள் பரிந்துரை செய்துள்ள யூனியன் அலுவலகம் அருகில் பழைய வேளாண் அலுவலக வளாகத்திலேயே  புதிய கட்டிடம் கட்டுமானப் பணிகளை விரைந்து துவக்க வேண்டும். கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மிஷின் இயங்காமல் உள்ளது . மேலும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்படாமல் உள்ளது. புளியரை வழியாக கேரளாவிற்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்லும் வண்டிகளுக்கு கட்டுப்பாடு உள்ளதை விளக்க வேண்டுமென்று சட்டசபையில் பேசியுள்ளேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிக்கு சுற்றுசுவர் மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும். எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த ஆண்டு 2 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கிறேன். கடையநல்லூர் நகராட்சி கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் கலங்கலாக வருகிறது. எனவே பில்டர் பொருத்த வேண்டும். மழைக்காலத்தை முன்னிட்டு கொசு, டெங்கு ஒழிப்பு முகாம் நடத்த வேண்டும். அரசின் வேலைவாய்ப்பு முகாமை கடையநல்லூர் தொகுதியில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.