Press "Enter" to skip to content

திண்டிவனம் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சித்தணி அருகே உள்ள ஏழாய் கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த மான் கிணற்றில் தவறி விழுந்தது. முனியப்பன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த  மான் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து கிராம மக்கள், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சந்தானகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி கயிறு மூலம் மானை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மான் விழுப்புரம் வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மானை வனத்துறையினர் வேட்டவலம் காப்பு காட்டில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.