Press "Enter" to skip to content

பயோமெட்ரிக் எந்திரத்தில் தமிழ் நீக்கம்- பாலகிருஷ்ணன் கண்டனம்

ஆசிரியர்கள் வருகை பதிவுக்கான பயோமெட்ரிக் எந்திரத்தில் தமிழை நீக்கி விட்டு அதற்கு பதிலாக இந்திமொழியை சேர்த்திருப்பது கண்டனத்திற்குரியது என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் முறைக்குப் பதிலாக 2019 ஜனவரி முதல் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கட்டாயமாக் கப்பட்டு வருகிறது.

பயோ மெட்ரிக் எந்திரத்தில் விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது தமிழை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக இந்தி மொழியில் பதிவேற்றங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளிலும் மத்திய பா.ஜ.க. அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தி திணிக்கப்படுவதென்பது தொடர்கிறது. இதுபற்றி தட்டி கேட்க வேண்டிய அ.தி.மு.க. அரசும் வாயை மூடிக் கொண்டு, கண்டும், காணாமலும் இருந்து வருவது நியாயமற்றது.

எனவே, ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் உள்ள பயோ மெட்ரிக் முறையில் இந்தி மொழியை நீக்கி தமிழ் மொழியை மீண்டும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.