Press "Enter" to skip to content

திருச்செந்தூர் அருகே சரவணபவன் ராஜகோபால் உடல் அடக்கம்

திருச்செந்தூர்: பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன்  ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு, சரணடைந்த  ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், பின்னர் வடபழனியில் உள்ள தனியார்  மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 18ம் தேதி  அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை க்கு பின் ராஜகோபாலின் உடல் சொந்த ஊரான தூத்துக்குடி  மாவட்டம், திருச்செந்தூர் அருகே புன்னை நகருக்கு நேற்று  காலை கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டில் காலை 7.30 மணி முதல் பலர் அஞ்சலி செலுத்தினர். மாலை 4  மணியளவில் புன்னைநகரில் உள்ள தோட்டத்தில் ராஜகோபாலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.