Press "Enter" to skip to content

நடுக்கடலில் பலத்த காற்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. நடுக்கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி டோக்கனை வழங்கவில்லை. இதனால் ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை நிறுத்தப்பட்டுள்ளன. நடுக்கடலில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், நகர் பகுதியில் வழக்கமாக வீசும் காற்றுக்கூட இல்லாமல், காலை 8 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காற்றின் வேகம் கட்டுக்குள் வந்தால் இன்று மீண்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »