Press "Enter" to skip to content

காட்டாற்று வெள்ளத்தில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு

பொள்ளாச்சி: காட்டாற்று வெள்ளத் தில்  அடித்துச் சென்ற குழந்தை  சடலமாக மீட்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த  சர்க்கார்பதியில், கடந்த 8ம் தேதி இரவு பெய்த அடைமழை (கனமழை) காரணமாக நாகரூத்து பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்த  குடிசைகள் அடித்து செல்லப்பட்டது. இதில் குஞ்சப்பன்  என்பவரின் 2 வயது பெண் குழந்தை சுந்தரி   தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய அவரது மனைவி அழகம்மாள்,  மகன் கிருஷ்ணன், மகள் ஜெயா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களை வனத்துறையினர் மீட்டனர். குழந்தை சுந்தரி, 5  நாட்களுக்கு பின் நேற்று மாலை சர்க்கார்பதியிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள பீடர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.