கரூர் அரசு மருத்துவமனையில் 2-வது தளத்தில் படியேற முடியவில்லை என முகாமை புறக்கணித்த மாற்றுத் திறனாளிகள்

கரூர்: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வது தளத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம்  நடத்தப்பட்டதால் படியேறி செல்லமுடியாமல் தவித்தனர். மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தரைத்தளத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 2-வது தளத்திற்கு முகாமை மாற்றியதால், மாற்றுத்திறனாளிகள் படியேறி செல்லமுடியாமல் சிரமப்பட்டனர்.இதுபற்றி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முகாமினை சிலர் புறக்கணித்தனர். தரைத்தளத்தில் முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்வதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உறுதியளித்ததால் அனைவரும் முகாமிற்கு திரும்பினார்.

Source: Dinakaran