Press "Enter" to skip to content

ஆல்வார் மாட்டு வியாபாரி பெலுகான் படுகொலை வழக்கு- 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மாட்டு வியாபாரி பெலுகான் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2017-ல் பசு பாதுகாவலர்களால் பெலுகான் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான காணொளிக்கள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுின. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பெலுகான் படுகொலை சம்பவம்.

இச்சம்பவம் தொடர்பாக 6 பசுபாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்ட பெலுகான், அவரது மகன்கள் இர்ஷாத், ஆரிஃப் ஆகியோர் மாடுகளை கடத்தியதாகவும் காவல் துறையினர் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையானது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 6 பசு பாதுகாவலர்களையும் விடுதலை செய்துள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.