நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றகோரி தேசிய கொடியுடன் குளத்தில் இறங்கி போராட்டம்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றகோரி தேசிய கொடியுடன் குளத்தில் இறங்கி போராட்டம்

கும்பகோணம்  நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கும்பகோணம் ஆயிகுளத்தில் இறங்கி தேசிய கொடியுடன் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட தகவல் உரிமை சட்ட ஆர்வலர் இயக்கத்தினர் தேசிய கொடியுடன் கும்பகோணம் ஆயிகுளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். மாவட்ட தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்க செயலாளர் விமலநாதன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், கும்பகோணத்தில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும். குளத்துக்கு நீர் வரும் பாதை, வெளியேறும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆறு, ஏரி, வாய்க்கால், கண்மாய் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளை தூர்வாரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy