பாத்ரூமுக்குள்.. வற்புறுத்திய கணவர்.. உடன்பட மறுத்த மனைவி.. சரமாரி அடி உதை

பாத்ரூமுக்குள்.. வற்புறுத்திய கணவர்.. உடன்பட மறுத்த மனைவி.. சரமாரி அடி உதை

அகமதாபாத்: பாத்ரூமுக்குள் உறவு வைத்துக் கொள்ளலாம் வா என்று கூறி கடந்த நான்கு மாதங்களாக சித்திரவதை செய்து வந்துள்ளார் கணவர். இதற்கு உடன்படாத மனைவியை அவர் கொடூரமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். மனைவி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தின் பவ நகர் நகரத்தில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த 19 வயது பவித்ரா (பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண் காவல் துறை நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் மேலும் பல பரபரப்பான புகார்களை அடுக்கியுள்ளார்.

எனது கணவர் மட்டுமல்ல, எனது கணவரின் சகோதரர்களும் கூட என்னை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தனர். கணவரின் அண்ணன் என்னை பலமுறை மானபங்கப்படுத்தியுள்ளார். எனது மாமனார், மாமியார் வரதட்சணை கூடுதலாக கேட்டு அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.

எனது கணவர் என்னை பாத்ரூமுக்குள் வைத்து உடலுறவு கொள்ளலாம் என்று கூறி நான்கு மாத காலம் சித்திரவதை செய்தார். உடன்படாத என்னை சரமாரியாக அடித்து உதைப்பார்.

கல்யாணமான நாள் முதலே எனக்கு சித்திரவதைதான். நடு ராத்தியில் என்னை எழுப்பி போய் அம்மா வீட்டுக்குப் போய் வரதட்சணை வாங்கிட்டு வா என்று கூறி அடிப்பார்கள். கொடுமையாக அடிப்பார்கள். எனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பெண் எனது கணவரையும், மாமனார் மாமியாரையும் தூண்டி விட்டு அடிக்க வைப்பார்.

வாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு

எனது கணவருடன் நான் சந்தோஷமாக உறவு கொண்டதே இல்லை. எல்லாமே கட்டாயப்படுத்தி வன்புணர்வுதான் செய்தார். பாத்ரூமில்தான் அவர் வைத்துக் கொள்ள விரும்புவார். நான் மறுப்பேன். அடி உதைதான்.

அங்கிருந்து எப்படியோ தப்பி வந்த இப்பெண் தனது தாய் வீட்டுக்கு வந்து கதறியுள்ளார். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. புகாரைப் பதிவு செய்த காவல் துறையினர் தற்போது அனைவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடும் சட்டப் பிரிவுகளும் சுமத்தப்பட்டுள்ளன.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram