Press "Enter" to skip to content

தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு

ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடர் வண்டிகளை இந்தியதொடர்வண்டித் துறை உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி:

பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக, சில தொடர் வண்டிகளை தனியார்வசம் ஒப்படைக்கதொடர்வண்டித் துறை திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக, இந்தியதொடர்வண்டித் துறை உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) 2 தொடர் வண்டிகளை சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவையே அந்த தொடர் வண்டிகள். 3 ஆண்டுகளுக்கு இந்த தொடர் வண்டிகளை ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும்.

இந்த தொடர் வண்டிகளில், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கக்கூடிய சிறப்பு கட்டணம் அமல்படுத்தப்படும். கட்டண விவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்யும். இதில், எவ்வித சலுகைகளோ, பாஸ்களோ இருக்காது.தொடர்வண்டித் துறை ஊழியர்கள், ஓடும் ரெயிலில் அனுமதிச்சீட்டு பரிசோதனை நடத்த மாட்டார்கள்.

இருப்பினும்,தொடர்வண்டித் துறையின் என்ஜின் டிரைவர்கள், அட்டைகள், நிலைய மேலாளர்கள் ஆகியோர்தான் இவற்றிலும் பணிபுரிவார்கள். இந்த தொடர் வண்டிகளின் சேவை, சதாப்தி தொடர் வண்டிகளுக்கு இணையாக இருக்கும் என்றுதொடர்வண்டித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.