Press "Enter" to skip to content

குன்னூர் முக்கிய சாலைகளில் நடைபாதை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

குன்னூர்: குன்னூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபாதை இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குன்னூரில் இருந்தும், சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் மருத்துவ தேவை, பள்ளி, கல்லூரி மற்றும் இதர பணிகளுக்கு என பொதுமக்கள் அதிகளவில் குன்னூர் டவுனுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு குன்னூர் நகரில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. குறிப்பாக பஸ் நிலையத்தில் இருக்கை வசதி, நடைபாதை வசதி உள்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது.

இதனால் தினமும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேவைகளுக்காக குன்னூர் நகருக்கு வருவதையே ஒரு சிலர் தவிர்த்து வருகின்றனர். நடைபாதை வசதிகளின்றி பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. நடைபாதைகள் இல்லாததால் குன்னூர் மவுண்ட் ரோடு சாலையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே குன்னூர் பகுதியில் நடைபாதைகள் அமைத்து போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என குன்னூர் பகுதியில் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.