Press "Enter" to skip to content

கருப்புபட்டியலில் வைக்கப்பட்டிருந்த 312 சீக்கியர்களின் பெயர்கள் நீக்கம்

இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏதிராக செயல்பட்டதாக கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 312 சீக்கியர்களின் பெயர்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வந்தது. 1980-ம் ஆண்டு இது தொடர்பாக நடந்த கலவரத்தின் போது சீக்கியர்கள் பலர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

அவர்களில் 314 சீக்கியர்களை ஒருமைப்பாட்டை சீர்குலைத்து பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இந்தியாவுக்குள் நுழைய முடியாதவாறு கருப்பு பட்டியலில் மத்திய அரசு இணைத்திருந்தது. பல ஆண்டுகளாக அவர்களது பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 314 பேரில் 312 சீக்கியர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால் தடை காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் சீக்கியர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்ப உறவினர்களை சந்திக்கலாம். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.