Press "Enter" to skip to content

பீகாரில் பா.ஜனதா தலைவர் கழுத்தை அறுத்துக்கொலை

பீகாரில் பா.ஜனதா தலைவரை மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா:

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் சத்கார்வா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் கோடா (வயது 40). பா.ஜனதாவின் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

இவரை சத்கார்வா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அந்த இடத்தில் சில துண்டு பிரசுரங்களையும் விட்டுச் சென்றனர். அவற்றில், தினேஷ் கோடா காவல் துறை உளவாளியாக செயல்பட்டதாகவும், தங்கள் பெயரில் மக்களிடம் வரி வசூலித்து வந்ததாகவும் மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.