Press "Enter" to skip to content

மோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை

பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட 2,700 நினைவுப்பரிசுகளை இ- ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தரப்பினரால் நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சால்வைகள், அங்க வஸ்திரங்கள், தலைப்பாகைகள், பிற கைவினைப்பொருட்கள் என 2,700 நினைவுப்பரிசுகள் சேர்ந்துள்ளன. அவை இ- ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கான இ-ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த மாதம் 3-ந் தேதி வரை இந்த ஏலம் நீடிக்கிறது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ‘மாதிரி’ மாட்டு வண்டியும் ஏலத்துக்கு வந்துள்ளது. இதன் தொடக்க விலை ரூ.1,000 ஆகும்.

இதை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் பட்டேல் ரூ.2,100-க்கு ஏலம் கேட்டுள்ளார். அடிப்படையில் விவசாயி என்பதால் இந்த மாதிரி மாட்டு வண்டியை பிரகலாத் பட்டேல் ஏலம் கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரி மாட்டுவண்டி அவருக்கு விற்பனை செய்யப்பட்டு, அவர் வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியுமா என்பது அடுத்த மாதம் 3-ந் தேதி தெரிந்து விடும்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.