Press "Enter" to skip to content

அப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் நடனம் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்

கொல்கத்தா: அப்படி ஒரு வளைவு.. அப்படி ஒரு நெளிவு.. அபிநயம் பிடித்து, இடுப்பை வளைத்து, நெளித்து 2 பெண் எம்பிக்கள் நடனம் ஆடி இருக்கிறார்கள்.

2 பெண் எம்பிக்கள் வங்காள அரசியலில் கலக்கி வருகிறார்கள். மிமி சக்ரபோர்த்தி, நுஸ்ரத் ஜகான்! இவர்கள் இருவருமே வங்காள நடிகைகள்!

மிமிக்கு 30 வயசு. ஜகானுக்கு 29 வயசு. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிட்டார்கள். மெகா வெற்றி பெற்று எம்பியும் ஆகி விட்டார்கள்.

ஃபேஸ்புக்

முதல் பார்லிமெண்ட்டுக்கு போகும்போதே இவர்கள் அதிகம் பேசப்பட்டார்கள். இதற்கு காரணம், இவர்கள் அணிந்து கொண்டு போன மாடர்ன் உடைதான். அங்கு நின்று 2 பேரும் அடையாள அட்டையுடன் போட்டோவும் எடுத்து கொண்டு, அதை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிடவும், ஆதரவும், கருத்தும் மாறி மாறி எழுந்தன.

பஞ்சாயத்தா?

“நாங்க வயசு பெண்கள். அது ஏன் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது? குற்ற பின்னணி, ஊழல் கறையே இருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பார்லிமென்ட் உறுப்பினர்களை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை? ஒரு ஆண் எம்பி ஜீன்ஸ் போட்டு வந்தால், அதை யாரும் எதிர்க்கறது இல்லை, இதுவே ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வந்தால் உடனே பஞ்சாயத்துதானா?” என்று கேட்டிருந்தனர்.

துர்கா பூஜை

இப்போது இவர்கள் இருவரது நடனம் ஆடும் காணொளி ஒன்று மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. நம்ம ஊர்ல நவராத்திரி விழா நடப்பதுபோல, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை ரொம்பவும் ஃபேமஸ் ஆனது. இந்த வருடம் இந்த பூஜை ஒரு வாரத்துக்கு அமர்க்களப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் அந்த மாநில அரசு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று துர்கை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் பாடல் ஒன்றை தயாரித்துள்ளது.

அப்ளாஸ்

இந்த பாட்டுக்குதான், 2 எம்பிக்களும் நடனம் ஆடியுள்ளனர். அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் நடிகைகள் என்பதால், நடனத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி ஒரு நளினம்… அபிநயம்.. என உடலை வளைத்து நெளித்து அநாயசமாக ஆடி அப்ளாஸ் வாங்கிவிட்டனர். இந்த காணொளிதான் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. அதனால்தான் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டான்ஸை பார்த்து பரவச “லைக்” தந்து வருகிறார்கள்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.