பணக்கார மாநில கட்சிகள்.. ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக!

பணக்கார மாநில கட்சிகள்.. ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக!

டெல்லி: நாட்டின் பணக்கார மாநில கட்சிகள் பட்டியலில் ரூ191 கோடி சொத்துகளுடன் திமுக 2-வது இடத்திலும் ரூ189 கோடி சொத்துகளுடன் அதிமுக 3-வது இடத்திலும் இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஜனநாயகம் தொடர்பான ஜனநாயக சீரமைப்புகளுக்கான அமைப்பு இது தொடர்பாக வெளியிட்டுள்ள விவரம்:

மொத்தமாக 39 மாநில கட்சிகளின் சொத்து மதிப்பான 2016-17-ல் ரூ1,267 கோடியாக இருந்தது. இது 2017-18-ம் ஆண்டில் ரூ1,320 கோடியாக அதிகரித்திருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பானது ரூ583.22 கோடியாக அதாவது 2.13% (ரூ571 கோடியில் இருந்து) ஆக அதிகரித்திருக்கிறது.

திமுக 2-வது பணக்கார கட்சி

திமுகவின் மொத்த சொத்து மதிப்பு 2016-17 ஆம் ஆண்டில் ரூ183.36 கோடியாக இருந்தது. இது 2017-18ம் ஆண்டில் 4.5% அதிகரித்து ரூ191. 64 கோடி சொத்து மதிப்பாக உயர்ந்திருக்கிறது. திமுகவுக்கு முதலீடுகளில் இருந்தே ரூ162.07 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என்கிறது.

அதிமுகவுக்கு 3-வது இடம்

ஆளும் அதிமுக 2016-17-ல் அதன் சொத்து மதிப்பு ரூ187.72 என கூறியது. இது 2017-18ல் ரூ189.54 கோடியாக அதிகரித்துள்ளது. மாநில கட்சிகளில் ரூ189.41 கோடி கையிருப்பு வைத்திருக்கக் கூடிய 2-வது பெரிய கட்சியாக இருப்பது அதிமுக.

இவ்வளவுதான் பாமக

பாமகவின் சொத்து மதிப்பு ரூ2.63 கோடியாக 2017-18ல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இதன் சொத்து மதிப்பு ரூ2.59 கோடியாக இருந்ததாம்.

அடடே தேமுதிக

தேமுதிகவின் சொத்து மதிப்பு 206-17ல் ரூ67.7 லட்சமாகும். 2017-18ல் 28.5% அதிகரித்து ரூ87 லட்சமாக உயர்ந்துள்ளதாம். தெலுங்குதேசம் கட்சியின் 2016-17ம் ஆண்டு சொத்து மதிப்பு ரூ7.84 ஆக இருந்தது. இது 190% அதிகரித்து 2017-18ல் ரூ22.76 கோடியாக உயர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram