காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் விடுதலை- அமைதியை சீர்குலைக்க கூடாது என நிபந்தனை!

ஜம்முவில் வீட்டுக்காவலில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு |Jammu Leaders Freed From House Arrest

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இருப்பினும் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு முன்னதாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் லோக்சபா எம்பியுமான பரூக் அப்துல்லா, பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2 மாத காலமாகியும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

இதையடுத்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி குரல்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று அரசியல் தலைவர்களான யாவர் மிர், நூர் முகமது, சோயிப் லோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அமைதியை சீர்குலைக்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் விடுதலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram