பக்க சிறப்பான தரமான சம்பவம்…! தலைவரின் 168 படத்திற்கு வரிசை கட்டி வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

பக்க சிறப்பான தரமான சம்பவம்…! தலைவரின் 168 படத்திற்கு வரிசை கட்டி வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

ஜாம்பவான் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம்  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே நாம் அறிந்த தகவல் தான்.

இந்நிலையில், தலைவர் அடுத்ததாக நடிக்க உள்ள 168 ஆவது படத்தை, அஜித்தை வைத்து, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிய, சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக, இன்று காலை இந்த படத்தை தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

மேலும் விரைவில் இந்த படம் குறித்த, மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பற்றி தகவல் வெளியானதில் இருந்து ரஜினி ரசிகர்கள்  சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

அதே போல் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான ‘நம்ப வீட்டு பிள்ளை’ பட குழுவினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதாவது இந்த படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், தன்னுடைய சமூக வலைத்தளத்தில், பட்டாசு வெடிக்க போகிறது… மிகச்சரியாக சிறப்பான தரமான சம்பவம் என பதிவிட்டுள்ளார். 

இவரை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூரி என மூவரும் அடுத்தடுத்து வரிந்து கட்டி கொண்டு தங்களுடைய வாழ்த்தை சூப்பர்ஸ்டாரின் 168 படத்திற்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Thalaivar super star @rajinikanth sir and @directorsiva sir wit @sunpictures 🔥🔥🔥Going to be a cracker.. Pakka sirappaana tharamaana sambavam👍💪 https://t.co/1MVPjg1tNg

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 11, 2019

ஜாம்பவான் @rajinikanth sir and @sunpictures and @directorsiva sir மாபெரும் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்💐💐💐 https://t.co/kzj1LVa4Uh

— Actor Soori (@sooriofficial) October 11, 2019

Super star ⭐️ + Sun pictures + @directorsiva #VeraLevel 🔥🔥🔥

Best wishes team 💐👍#Thalaivar168BySunPictures https://t.co/pqr91w5KOC

— Pandiraj (@pandiraj_dir) October 11, 2019

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M