Press "Enter" to skip to content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: தமிழக, கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதை பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு  18,672 கனஅடியாக இருந்த நிலையில்,  நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 13,404 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா  பாசனத்திற்கு, விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு மேற்கு  கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும்  திறந்து விடப்படுகிறது. வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது. நேற்று முன்தினம், 116.73 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 116.24 அடியாக சரிந்தது.  நீர் இருப்பு 87.60  டிஎம்சியாக உள்ளது. இதேபோல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 17ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 13 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இருப்பினும், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து  கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.