மோடி செஞ்சது பெரும் தவறு .  காஷ்மீர் விஷயத்தில் கடைசி சீட்டையும் விளையாடி விட்டார்.. இம்ரான்கான்

மோடி செஞ்சது பெரும் தவறு . காஷ்மீர் விஷயத்தில் கடைசி சீட்டையும் விளையாடி விட்டார்.. இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பிரதமர் மோடி காஷ்மீர் விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தன்னிடம் இருந்த கடைசி சீட்டையும் எடுத்து விளையாடி விட்டார். ஆனால் காஷ்மீர் மக்கள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்கவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மனித சங்கிலி பேரணி நடந்தது.. இந்த போராட்டத்தில் மக்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ஹாங்காங் போராட்டத்தை முழுமையாக கவர் செய்யும் சர்வதேச ஊடகங்கள் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டுகொள்ளவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் யாரும் விரும்பவில்லை. அங்கு போடப்பட்டுள்ள அனைத்து தடைகளும் விலக்கி கொள்ளப்பட வேண்டும்.

பிரதமர் மோடி காஷ்மீர் விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தன்னிடம் இருந்த கடைசி சீட்டையும் எடுத்து விளையாடி விட்டார். ஆனால் காஷ்மீர் மக்கள் அவரது முடிவை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

காஷ்மீர் மக்கள் 70 வருடங்களாக அடக்குமுறைகளை எதிர்த்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு எந்த பயமும் இல்லை” என்றார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram