Press "Enter" to skip to content

மூணாறு அருகே கேப் ரோட்டில் மீண்டும் மலைச்சரிவு

* போக்குவரத்து அடியோடு நிறுத்தம்
*  சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பு

மூணாறு : மூணாறு அருகே லாக்காடு கேப் ரோட்டில் நேற்று மீண்டும் மலைச்சரிவு ஏற்பட்டது. சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கேரள மாநிலம், மூணாறில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 8ம் தேதி திடீரென பெய்த அடைமழை (கனமழை)யால், லாக்காடு கேப் ரோட்டில் மலைச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த தமிழரசன் மாயமானார். அவரைத் தேடும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, இப்பகுதியில் நேற்று திடீரென மீண்டும் மலைச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளும், மணல் குவியலும் சாலையில்ல் குவிந்தன. அப்போது அவ்வழியே வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இதனால் லாக்காடு கேப் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பொதுமக்கள், சுற்றுலா வாகனங்கள் இப்பாதை வழியாக செல்வதை தடுக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தேவிகுளம் எஸ்ஐ ஜோயி கூறுகையில், “இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மலைச்சரிவு ஏற்பட்டு வருகிறது. லாக்காடு கேப் ரோடு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், மாயமான வாலிபரை தேடும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.