தமிழுக்கு மோடி செய்தது போல எந்த பிரதமரும் செய்யல..! அதிமுக அமைச்சரின் அதிரடி ட்வீட்..!

தமிழுக்கு மோடி செய்தது போல எந்த பிரதமரும் செய்யல..! அதிமுக அமைச்சரின் அதிரடி ட்வீட்..!

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி நேற்று மாலை மாமல்லபுரத்தில் வரவேற்றார். அப்போது தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு போட்டு பிரதமர் மோடி உற்சாகமாக காட்சியளித்தார். இது தமிழக மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. 

பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி வேட்டி சட்டையுடன் மாமல்லபுரத்தில் வலம் வரும் புகைப்படங்கள் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று  பதிவிட்டுள்ளார். 

மேலும் கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது எனவும் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.

Source: AsianetTamil

Author Image
Kundralan M