சரிந்தது தங்கம் விலை..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

சரிந்தது தங்கம் விலை..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

சரிந்தது தங்கம் விலை..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும்  சில சமயங்களில் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது.சென்ற மாதம் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை இடையே இடையே அவ்வப்போது குறைந்து விற்பனையாகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க இது சரியான தருணமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து 30 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த ஒரு தருணத்தில் இன்று சவரன் விலை குறைந்து உள்ளது. அதாவது இன்றைய காலை நேர நிலவரப்படி…

கிராமுக்கு 9 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து152 ரூபாய்க்கு விற்கப்டுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 40 பைசா அதிகரித்தும் 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

Source: AsianetTamil

Author Image
Kundralan M