தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் சவீதா மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் ஆஜர்

தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் சவீதா மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் ஆஜர்

தேனி: தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் சவீதா மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் ஆஜர் படுத்தப்பட்டார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பிரியங்கா சவீதா மருத்துவக் கல்லூரியில் படித்தார். சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் சவீதா மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. மாணவி பிரியங்கா எம்.பி.பி.எஸ். படிப்பில் முறைகேடாக சேர்ந்தது குறித்து கல்லூரி முதல்வரிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy