ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ… சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம்

ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ… சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம்

அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சைகோ போல் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். ஆந்திரா முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களை அந்த மாநில மக்களுக்காக அறிவித்து வருகிறார். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெகன் காட்டும் அக்கறை அவரை இளைஞர்களிடையே பெருமளவில் கொண்டு சேர்த்துள்ளது.

அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் கண்களில் ஜெகன் விரலை விட்டு ஆட்டுகிறார் என்றே சொல்லலாம். அந்தளவு கடும் கெடுபிடிகளை காட்டுகிறார். சந்திரபாபு நாயுடு குடியிருப்பை இடித்து தள்ளியது, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைத்தது, விமானநிலையத்தில் நிற்க வைத்து சோதனையிட வைத்தது எனக் கூறிக்கொண்டே போகலாம்.

இதனால் ஆந்திர அரசியலில் எப்போதும் பரபரப்பு நிலவிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, தாம் பல முதல்வர்களை பார்த்துள்ளதாகவும், ஜெகன் மோகன் ரெட்டியை போல் ஒரு மோசமான நபரை தனது வயதிற்கும் பார்த்ததில்லை எனவும் வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளை தொடுத்து ஒடுக்க நினைக்கிறார் ஜெகன் எனக் குற்றஞ்சாட்டினார்.

#PrayForJapan .. டோக்கியோவை சிதைக்க வரும் ஹஜிபிஸ் புயல்.. பேய்மழையால் பேரழிவு அபாயம்.. காணொளி

மொத்தத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சைகோவை போல் செயல்படுகிறார் என்றும், ஜெகன் தனது பழிவாங்கும் போக்கை மாற்றிக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜெகன் இப்படியே செயல்பட்டார் என்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram