Press "Enter" to skip to content

`தலைகவசம் அணிந்தால்தான் வேலை’: ஹெல்மட் அணிவதில் முன்னோடியாக திகழும் தனியார் ஆலை தொழிலாளர்கள்

வி.கே.புரம்: விகேபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ்சில் அனைவரும் ஹெல்மட் அணிந்தால்தான் வேலைக்கு செல்ல முடியும் என்ற விதிமுறையை கடந்த 3 ஆண்டாக பின்பற்றி முன்னோடியாக திகழ்கிறார்கள். தமிழகத்தில் தினமும் டூவிலர் விபத்தில் ஏராளமானபேர் பலியாவதால் இதை தடுக்கும் ேநாக்கில் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்குவதை தவிர வேறு வழியில்லை என உயர்நீதிநீதி மன்றம் கிடுக்கிப்பிடி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பதோடு, அனைவரும் கட்டாயம் அணியவேண்டும், இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அனைவரும் அணியத்தொடங்கி விட்டனர். இது பாராட்டுக்குரிய விஷயமாகும்.

அரசு மற்றும் கோர்ட் உத்தரவினால் 3 ஆண்டுக்கு முன்பே ஒரு தனியார் மில் நிர்வாகம் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்கி இன்று முன்னோடியாக திகழ்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு: நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் 139 ஆண்டுக்கு முன்பே வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அந்த ஆலை துவங்கப்பட்டது. இந்த ஆலையை இங்கிலாந்தை சேர்ந்த கார்வி சகோதரர்கள் துவக்கி அதற்கு ஆர்வி மில் என பெயர் சூட்டினர். இந்த ஆலையில் இங்குள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்த ஆலையில் பேன்ட், சர்ட் மற்றும் நூற்கண்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு  அனுப்பப்பட்டது. இந்த ஆலை 50 ஆண்டுக்கு முன்பு கொடி கட்டி பறந்தது. அப்போது 10 ஆயிரம் ஆண், பெண் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலைபார்த்து வந்தனர். காலப்போக்கில் ஏராளமான ஆலைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் வரத்தொடங்கியதால் மதுராகோட்ஸ் என பெயர் மாற்றப்பட்ட இந்த ஆலையில் தற்போது வண்ண நூற்கண்டு மட்டும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் போதிய லாபம் இல்லாததால் தற்போது 600 நிரந்தர தொழிலாளர்களும் 2 ஆயிரம் ஆண், பெண் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலைபார்த்து வருகிறார்கள்.

உயர்நீதிநீதி மன்றம் உத்தரவுப்படி கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்த மில்லில் வேலைபார்ப்பவர்கள் தொழிலாளர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் சரி டூவீலர்களில் வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மட் அணிந்துதான் ஆலைக்குள் செல்லவேண்டும் என்ற விதிமுறையை மில் நிர்வாகம் கண்டிப்புடன் கடைபிடித்து வருகிறது. மேலும் வெளி நபர்கள் யாராவது தொழில் விஷயமாக பார்க்க டூவீலர்களில் வந்தால் அவர்கள் ஹெல்மட் அணியாமல் வந்தால் மில் நிர்வாகமே ஸ்பேர் ஹெல்மட்கள் வைத்துள்ளன. அது நுழைவு வாசலில் உள்ள பாதுகாப்புயிடம் இருக்கும். அவரிடம் வாங்கி ெஹல்மட் மாட்டிக்கொண்டுதான் செல்லவேண்டும். திரும்பும்போது அதை கழற்றி கொடுத்து விடவேண்டும். இவர்கள் கடைபிடிப்பது போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மட் அணிந்துதான் வேலைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைப்பதோடு, பெருமளவு விபத்துக்களை தவிர்த்து விடலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.