Press "Enter" to skip to content

குண்டேரிபள்ளம் அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபி: கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை இன்று நிரம்பியதை தொடர்ந்து உபரி  நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் பத்து கிராமங்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையானது குன்றி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 42 அடி உயரமுள்ள இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த அணையின் மூலம் குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், மோதூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வரை அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக அணைக்கு நள்ளிரவில் 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்தது. இதனால் அணை இன்று காலை நிரம்பியது. அதைத்தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

இன்று காலை 6 மணிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கன அடியாகவும், 7 மணிக்கு 3 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. தற்போது அணைக்கு வரும் உபரி நீர் 3 ஆயிரம் கன அடி முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பியதை தொடர்ந்து குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிபுத்தூர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.