Press "Enter" to skip to content

ஊட்டியில் மீண்டும் மழை தேயிலை விவசாயிகள் பாதிப்பு

ஊட்டி: ஊட்டியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் தேயிலை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இம்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கிய மழை சில நாட்கள் இடை விடாமல் பெய்தது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது. குடிநீர் ஆதாரங்களிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் சற்று மழை குறைந்து காணப்பட்ட போதிலும்,

கடந்த வாரம் முதல் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர் ஆகிய தாலுகாக்களில் மழை பெய்து வருகிறது. நேற்று  இரவு ஊட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலும், இரவில் நீர் பனியும் என மாறுபட்ட காலநிலை நிலவியது. இந்நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் நேற்று பிற்பகலுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை ெபய்து. இரவு முதல் பரவலாக மழை பெய்ய துவங்கியது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது காய்கறி அறுவடை காலம் என்பதால், மழை பெய்தால் காய்கறிகள் அழுகும் அபாயம் உள்ளது. அதே போல் மேக மூட்டம் மற்றும் மழையால் தேயிலையில் கொப்பள நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அடிக்கடி மாறும் காலநிலையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.