இந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட  எஸ்.வி.சேகர் !

இந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர் !

சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நேற்று பிரதமர் மோடி சீன அதிபர்  ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பின்னர் அவர் கோவளம் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இரவு தங்கினார். 

இந்நிலையில் இன்று காலை கோவளம் கடற்கரையில்  பிரதமர் மோடி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகள் கரையில்  ஒதுங்குவதை பார்த்த அவர் அரைமணிநேரம் துப்புரவுப் பணி மேற்கொண்டார். 

அள்ளிய குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் தந்து பொது இடங்களை சுத்தமாகவும் துய்மையாகவும் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். 
இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில்  மோடியைக் கிண்டல் பண்ணும் இணையப் பயனாளர்கள் பிரதமரின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் மஹாபலிபுரம் கடற்கரையில் குப்பை அள்ளி தூய்மயாக்கும் நம் பிரதமர்.ஒரு கவுன்சிலர் கூட தன் கவுரவம் குறைந்துவிடும் என செய்ய யோசிக்கும் இச்செயலை உணர்வுபூர்வமாக செய்யும் நம் இந்திய பிரதமரின் கால் தூசி கூட பெறமாட்டார்கள் அவரை விமர்சிக்கும் இணையப் பயனாளர்கள் என பதிவிட்டுள்ளார்.

Source: AsianetTamil

Author Image
Kundralan M