Press "Enter" to skip to content

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வெற்றி யாருக்கு.. சற்று நேரத்தில் வெளியாகிறது எக்ஸிட் போல்

டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்துள்ளது. வரும் 24ம் தேதி வியாழக்கிழமை, இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்னணிதொலைக்காட்சிசேனல்கள், முன்னணி ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து வெளியிட உள்ளன. மாலை 6.30 மணிக்கு மேல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும்.

நியூஸ்18-ஐபிஎஸ்ஓஎஸ், டைம்ஸ்நவ்-டுடேஸ்சாணக்யா, டைம்ஸ்நவ்-விஎம்ஆர் ஆகியவை இணைந்து இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன. இந்த கருத்துக் கணிப்பு தொடர்பான உடனுக்குடனான தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக் கணிப்புகளும், இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றிபெற வாய்ப்பு அதிகம் என கணித்த நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக எக்ஸிட் போல் முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் ஒரே மிகுதியாக பகிரப்பட்டதுடில்தான் இருக்கும் என்பது வரலாறு. எண்ணிக்கையில் வேண்டுமானால் ஓரளவுக்கு வித்தியாசங்கள் இருக்குமே தவிர, தேர்தல் முடிவுக்கான மிகுதியாக பகிரப்பட்டது ஒரே மாதிரிதான் வரும் என்பதால், இந்த எக்ஸிட் போல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.