கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சர்வீஸ் சாலை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சர்வீஸ் சாலை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

பெ.நா.பாளையம்: கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில்  வீரபாண்டி அருகே மழை வெள்ளத்தில் சர்வீஸ் சாலை அடித்து செல்லப்பட்டது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தெற்குபாளையம் பிரிவில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே பழைய பாலத்தை  அகற்றி விட்டு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. போக்குவரத்திற்காக பாலம் அருகே புதிதாக தார்சாலையுடன் கூடிய சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் நேற்றிரவு முதல் விடிய விடிய அப்பகுதியில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் புதிதாக போடப்பட்ட சர்வீஸ் சாலை வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்டது. மேலும் புதிய பாலத்தின் பக்கவாட்டு சுவர் ஒரு புறம் சரிந்து மண்ணில் புதைந்தது. இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து நெடுஞ்சாலை  துறை அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy