மகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை! ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு

மகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை! ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 204 இடங்களில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது என ஏபிபி- சி ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வெல்லும் முனைப்பில் சட்டமன்ற தேர்லை சந்தித்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடந்து முடிந்தது.

மாலை 6 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட என்ற நிலையில் இப்போது கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. வெளியான அனைத்து கருத்துக்கணிப்பிலுமே பாஜக கூட்டணிதான் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும என்று தெரிவித்துள்ளன.

டிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை

ஏபிபி- சி ஓட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 204 இடங்களில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களிலும், மற்றவர்கள் 15 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஏபிபி- சி ஓட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளதால் பாஜகவின் காவிக்கொடி மீண்டும் மகாராஷ்டிராவில் பறக்கும் என்று அந்த கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். வரும் 24ம் தேதி இந்த கணிப்புகள் உண்மையா என்பது தெரிந்துவிடும். ஏனெனில் வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram