காணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு!

காணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. . இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும்.

இதனால் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அதிக கவனம் ஈர்க்கிறது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. இங்கு தற்போது 61.62% வாக்குகள் பதிவாகி உள்ளது. தற்போது ஹரியானா தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது.

நியூஸ் 18 டிவியும் சொல்லிருச்சு… மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனாவுக்கு அமோக வெற்றி!

ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், ஹரியானாவில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 8 இடங்களில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். 10 இடங்களில் மற்ற பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram