விமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்

விமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்

பாங்காங்: தாய்லாந்து விமானத்தின் அவசர கால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞரை விமான நிலைய காவல் துறையினர் கைது செய்தனர்.

தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்துக்கு தாய் ஸ்மைல் என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டு கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 80 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர்.

இது குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானியும் உடனே விமானம் நிறுத்தினார. பாதுகாப்பு படையினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த போதை இளைஞரை மடக்கிப் பிடித்து அழைத்து சென்றனர். மது போதையில் இருந்த அந்த இளைஞரிடம் எதற்காக அப்படி செய்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram