தலைக்குப்புற தேர் கவிழ்ந்து விபத்து… பாஜக எம்.பி படுகாயம்..!

தலைக்குப்புற தேர் கவிழ்ந்து விபத்து… பாஜக எம்.பி படுகாயம்..!

உத்தரகாண்டில் பாஜக எம்.பி. சென்ற தேர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீரத் சிங் ராவத் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதியின் பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் தீரத் சிங் ராவத். இவர் தனது காரில் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பீம்கோடா பன்ட் தீப் சாலையில் சென்றிக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தேர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தேருக்குள் இருந்த எம்.பி. தீரத் சிங் ராவத் படுகாயமடைந்தார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உதவூர்தி மூலம் 
ஹரித்வாரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M