Press "Enter" to skip to content

ஆஹா என்னா ஆச்சரியம்.. சீன ஏரிகளில் மனித முகத்துடன் கூடிய அரிய, பெரிய வகை மீன்.. காணொளி மிகுதியாக பகிரப்பட்டு

பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஏரி ஒன்றில் மனித முகம் கொண்ட மீன் ஒன்றை பார்வையாளர் ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார். இது தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

4 கால்கள் கொண்டு பிறந்த குழந்தை, ஆட்டு முகம், மனித உடல் கொண்ட ஆட்டுக் குட்டி, இரு தலைகளுடன் பிறந்த நாய்க்குட்டி என கேள்விப்பட்டுள்ளோம். சிலவற்றை புகைப்படமாக பார்த்துள்ளோம்.

ஆனால் சீனாவில் மனித முகத்துடன் கூடிய மீன் உள்ளது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் வீடியோ ஆதாரம் இருக்கிறது.

சீனாவின் தெற்கு பகுதியில் குன்மிங் என்ற நகரம் உள்ளது. அங்கிருந்த ஏரிக்கு பெண் பார்வையாளர் ஒருவர் சென்றார். அப்போது அங்கு மனித முகம் ஒன்று வித்தியாசமாக நீந்தி வருவதை கண்டார். முதலில் அதிர்ச்சி அடைந்த அவர் அதன் உடல் பகுதியை பார்வையிட்டார்.

அப்போதுதான் மனித முகம் கொண்ட மீன் என்பதை உணர்ந்தார். உடனே காணொளியாக எடுத்துக் கொண்டார். அதன் முகத்தில் இரு கரும்புள்ளிகள் உள்ளன. அவை அதன் கண்கள். இரு செங்குத்து கோடுகள் உள்ளன, அவை அதன் மூக்கு, கிடைமட்டமாக ஒரு கோடு இருந்தது, அது அதன் வாய் பகுதியாகும்.

இந்த காணொளி தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இதை பார்க்கும் இணையப் பயனாளர்கள், வீட்டில் கொண்டு வந்து வளர்க்க வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் இதை ஃப்ரை செய்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.