Press "Enter" to skip to content

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் சாவந்த் அறிவிப்பு

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை அமைச்சராக அரவிந்த் சாவந்த் பதவி வகித்து வருகிறார்.

மத்திய அமைச்சரவையில் பாஜக-சிவசேனா கட்சி இடையே இருந்த கூட்டணி முறிந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்த நிலையில் மத்தியிலும் கூட்டணி முறிந்தது.

பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற தேசியவாத காங்கிரசின் நிபந்தனையை சிவசேனா ஏற்றது.

மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு என தேசியவாத காங்கிரசின் நிபந்தனை எதிரொலியாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.