‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு? கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..!

‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு? கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..!

*    வரும் 15-ம் தேதி எனது ‘ஆக்‌ஷன்’ படம் திரைக்கு வருகிறது. அப்போது சுவரொட்டிகள், கட் அவுட் என வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்! அதற்கு பதில் ஏழைகளுக்கு உதவுங்கள்.’ என்று விஷால் வாண்டட் ஆக அறிக்கை விட்டுள்ளார். இதற்கு  ‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு?’ என்று கோடம்பாக்கத்தினரே குண்டக்க மண்டக்க சிரிக்கின்றனர். 

*    குஷ்பூ எங்கே இருந்தாலும் சர்ச்சைதான். கட்சி, திரைப்படத்தில், சீரியலில், பொது மேடையில் என்றில்லை. அட ட்விட்டரில் இருந்தாலும் பிரச்னையாகிறது. குஷ் தனது மகளது போட்டோவை ஆசையாக பதிவேற்ற, அதை ஒரு நபர் கிண்டலடிக்க, பதிலுக்கு குஷ்பு ஆவேசமாக சீற என்று ஒரே ரணகளம். 
விளைவு, ட்விட்டரை விட்டே வெளியேறிவிட்டார் குஷ்பு

*    சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி. வந்தவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தாட் பூட் என பல ரகசியங்களை போட்டுடுடைத்துப் பேசி, தன் அப்பாவின் இமேஜை கெடுப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி புலம்புகிறது. ‘எனக்கு விஸ்கி பிடிக்கும்.’ என்று தடாலடியாக பேசிய ஸ்ருதி, ‘என் அப்பாவும், அம்மாவும் (சரிகா) பிரிந்தது சரிதான். தினமும் அவர்களுக்குள் நடந்த சண்டையால் வீடே போர்க்கோலமாக இருந்தது. இப்போது பிரிந்திருந்தாலும், சந்தோஷமாக இருக்கின்றனர். அது போதும்.’ என்று சொல்லியிருக்கிறார். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M