சென்னை மேயர் பதவிக்கு   திமுக வேட்பாளர் இவர்தான் !! விருப்ப மனு தாக்கல் செய்து தொண்டர்கள் உற்சாகம் !!

சென்னை மேயர் பதவிக்கு திமுக வேட்பாளர் இவர்தான் !! விருப்ப மனு தாக்கல் செய்து தொண்டர்கள் உற்சாகம் !!

டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறறவுள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகிவிட்டன.

இந்த கட்சிகளின் சார்பில் தற்போது தேர்தலில் போட்டியிடவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில்  விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக பதவி வகித்திருக்கும் நிலையில், அதுபோலவே உதயநிதி ஸ்டாலினும் மேயராக வேண்டும் என்று திமுகவினர் விரும்புகிறார்கள். ஆகவே, இன்னும் பலரும் உதயநிதி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் திமுக மேலிடமும் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

Source: AsianetTamil

Author Image
Kundralan M