தேவபாண்டலம் கோயிலில் மகா சண்டி சடங்குத்தீ

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் மகா சண்டி சடங்குத்தீ நடைபெற்றது. இதையொட்டி துர்க்கையம்மனுக்கு விக்னேஸ்ர பூஜை, யாகசாலை பூஜை, மகா சண்டி சடங்குத்தீ நடைபெற்றது.
உலக நன்மைக்காவும், மழை வேண்டியும் இந்த சண்டி சடங்குத்தீ நடத்தப்பட்டது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran