’ஒத்த செருப்பு’படத்தின் டெலிட் செய்யப்பட்ட பாடல்…பார்த்திபனின் பிறந்தநாள் சிறப்பு காணொளி…

’ஒத்த செருப்பு’படத்தின் டெலிட் செய்யப்பட்ட பாடல்…பார்த்திபனின் பிறந்தநாள் சிறப்பு காணொளி…

இன்று தனது 62 வது பிறந்தநாளை ஒட்டி தனது ஒத்தச் செருப்பு படத்தில் டெலிட் செய்ய்ப்பட்ட பாடல் ஒன்றை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியிட்டார். பிறந்தநாள் வாழ்த்துகளோடு அப்பாடலை சிலாகித்தும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான பார்த்திபனின் ‘ஒத்தச் செருப்பு’படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் விமரிசகர்கள் மற்றும் சக கலைஞர்கள் அவரைக் கொண்டாடித்தீர்த்தனர். இன்று தனது 62 வது பிறந்தநாளை ஒட்டி குவிந்த வாழ்த்துகளுக்கு காலை முதலே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக நன்றி தெரிவித்து வந்த பார்த்திபன் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,…இன்றைய சிறப்பு…
சுத்தமான உணர்வால் நெய்யப்பட்ட பாடல்..என்ற அறிவிப்புடன், நீளம் கருதி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட பாடல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்தப் பாடல்…

இன்றைய சிறப்பு…
சுத்தமான உணர்வால்
நெய்யப்பட்ட பாடல்https://t.co/gozbBZLtqf

— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 15, 2019

Source: AsianetTamil

Author Image
Kundralan M