ராஜஸ்தான், குஜராத்தில் பல்லாயிரக்கணக்கில் கொத்து கொத்தாக செத்து விழும் வெளிநாட்டு பறவைகள்!

ராஜஸ்தான், குஜராத்தில் பல்லாயிரக்கணக்கில் கொத்து கொத்தாக செத்து விழும் வெளிநாட்டு பறவைகள்!

ஜெய்ப்பூர்/பூஜ் கட்ச்: ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் கொத்து கொத்தாக செத்து மடிவது சூழலியல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான ராஜஸ்தானின் சாம்பார் ஏரி பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் செத்து விழுந்தன. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இந்த பறவைகள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனவை.

இம்முறை கொத்து கொத்தாக சாம்பார் ஏரியின் பல இடங்களில் இப்பறவைகள் செத்து மடிந்துள்ளன. இவை எதனால் மடிந்து போகின்றன? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் குஜராத்தின் சதுப்பு நிலப் பகுதியான ரான் ஆப் கட்ச் பிராந்தியத்திலும் கொத்து கொத்தாக வெளிநாட்டு பறவைகள் இறந்து விழுந்துள்ளன. இப்பறவைகளின் உடல்களை பரிசோதித்து என்ன காரணம் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

Now Similar case is observed near Rann of Kutch Lake. Hundreds of birds are dying suddenly. Authorities are underway. I hope these two cases are unrelated. This one sent by @ronakdgajjar from there. https://t.co/k6SiyQD8zH pic.twitter.com/dSidzIzaH7

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan)

November 15, 2019


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram